கர்ணமோட்சம்
ஆங்காங்கே மிஞ்சியிருக்கும் கூத்துக்
கலையின் இன்றைய நிலையை உள்வாங்கி, அந்த வலியை கூத்துக் கலைஞரின் வாயிலாகவே
வெளிப்படுத்தியிருக்கும் குறும்படsம் 'கர்ண மோட்சம்'.
கிராமத்தில் இருந்து கூத்து கட்டுவதற்காக,
தன் சிறுவயது மகனோடு சென்னையின் தனியார் பள்ளி ஒன்றிற்கு வருகிறார் கர்ண
வேஷம் கட்டிய கூத்தாடி. வந்தபிறகு, திடீரென நிகழ்ச்சி ரத்தாகியிருப்பது
தெரிகிறது. கூத்து கட்டினால் கிடைக்கும் பணத்தைக்கொண்டுதான் மகன் கேட்ட
கிரிக்கெட் பேட் வாங்கமுடியும். ஊருக்குத் திரும்பிப்போக முடியும் என்ற
நிலை கூத்தாடிக்கு. பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தொலைபேசியில் பேசுகிறார்
கர்ணன். மாலை ஆறுமணிக்குத் தன் வீட்டில் வந்து சந்திக்குமாறு கூறுகிறார்
ஆசிரியர். அதுவரை என்ன செய்வதென்று தெரியாமல், அருகில் இருக்கும் இட்லி
கடைக்குச் செல்கிறார். அங்கே வேலை பார்க்கும் ஊமைச் சிறுமியின் அறிமுகம்
கர்ணனுக்குக் கிடைக்கிறது. அவளிடம் தன் கதையையும் கலையையும் சொல்லி,
கூடவே கூத்துக் கலையின் அடிப்படைகளையும் சொல்லிக்கொடுத்து சந்தோஷமடைகிறார்.
இறுதியில் ஆசிரியரைச் சந்தித்தாரா, மகனின் ஆசையை நிறைவேற்றினாரா என்பது
இக்குறும்படத்தின் அழுத்தமான முடிவு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை, வசனம் எழுதிய இக்குறும்படத்தை, முரளி
மனோகர் இயக்கியிருக்கிறார். தேசிய விருது உள்பட அறுபதுக்கும் அதிகமான
விருதுகளைப் பெற்றுள்ளது இக்குறும்படம்.
Post Comment
Keine Kommentare